புதுக்கோட்டை ரோட்டராக்ட் சங்கத்தின் 19 ஆம் ஆண்டு பணி ஏற்பு விழா அரசு வழிகாட்டு விதிமுறைகளுக்கு ஏற்ப நடைபெற்றது. அமைப்பின் தலைவராக கோபாலகிருஷ்ணன், செயலாளராக விக்னேஷ் நாராயணன், பொருளாளராக அபிமன்யு ஆகியோர் பணி ஏற்றனர். நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி-ன் சட்டமன்ற வேட்பாளர் முத்துராஜா கலந்து கொண்டு சிறப்பித்தார். புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவர் தனஜெய ராமசந்திரன் தலைமை தாங்கினார் , செயலாளர் ராஜா குமார் பொருளாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் ரோட்டராக்ட் மற்றும் இன்டராக்ட் சேர்மன் லக்ஷ்மணன், சங்க ஆலோசகர் செந்தில்குமார், மாவட்ட ரோட்டராக்ட் பிரதிநிதி சுரேஷ் சர்மா உடனடி முன்னாள் மாவட்ட ரோட்டராக்ட் பிரதிநிதி சபரிநாதன் நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். மேலும் நிகழ்ச்சியில் புதுக்கோட்டை ரோட்டராக்ட் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர மிதிவண்டி வழங்கப்பட்டது.



