புதுக்கோட்டை மறைமலை நகரில் உள்ள யூரோ கிட்ஸ் மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்கான
தனித் திறமைகளின் தேடல்போட்டி மேலும் கலை போட்டி, படம் வரைதல் போட்டி விளையாட்டுப்போட்டி ,மாறுவேடப் போட்டிகள் என இரு தினங்கள் நடைபெற்றது. நிகழ்விற்கு பள்ளியின் தாளாளர் கவிஞர் ஆர்எம்வீ .கதிரேசன் தலைமைதாங்கினார், பள்ளியின் சென்டர் ஹெட் தேவி கீர்த்தனா அனைவரையும் வரவேற்று போட்டிகளை முன்னின்று நடத்தி வைத்தார்.
போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள், நடுவர்களாக வாசகர் பேரவை செயலாளர் பேராசிரியர் விஸ்வநாதன் கோட்டையூர் கவி கல்லூரி பேராசிரியர்கள் உமா, பேராசிரியர் செல்லப்பன் கவிஞர்கள் பீர்முகமது காசவயல் கண்ணன், புதுகை புதல்வன் நாட்டுப்புற கலைஞர் சங்கம் சக்திபாலன் இளம்எழுத்தாளர் ஜனார்த்தனன், சமூக ஆர்வலர் டெய்சிராணி ஜெயலெட்சுமி ஆகியோர் போட்டியாளர்களுக்கு மதிப்பெண் வழங்கினர், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நகர்மன்ற உறுப்பினர் வளர்மதி சாத்தையா வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கி பாராட்டிப் வாழ்த்திப் பேசினார், போட்டியில் பங்கு பெற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் நற்சான்றிதழ்களை பள்ளியின் தாளாளர் கவிஞர் ஆர்எம்வீ .கதிரேசன் வழங்கி பாராட்டினார்.
பல்வேறு பள்ளிகளின் அனைத்துப் குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் பங்கு பெற்றனர், குழந்தைகளின் ஆசிரியைகள் மாணவ ,மாணவிகள் பெற்றோர்கள் இந்திய மருத்துவ சங்கத்தின் நிதி செயலாளர் மருத்துவர் கோபாலகிருஷ்ணன், யூரோ கிட்ஸ் மழலையர் பள்ளி பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் சிறப்புடன் செய்தனர் நிறைவாக பள்ளியின் ஆலோசகர் கலைச்செல்வி கதிரேசன் நன்றி கூறினார்.