புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  மாணவர்களுக்கான  திறனாய்வுத் தேர்வு

புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மெட்ரிக், சிபிஎஸ்சி , தனியார் சுய உதவிபெரும் பள்ளிகளில் இருந்து ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு மாணவர் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்வில் கலந்து கொண்டார்கள். மாவட்டக் கல்வி அலுவலரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்வில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு (22.10.2023) அன்று புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு நடைப்பெற்றது.

இதில் 91 பள்ளிகளில் இருந்து பள்ளிக்கு ஒரு மாணவர் வீதம் கலந்து கொண்டனர், இத்தேர்வானது மாணவர்களுக்கு அறிவுத் திறனை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் இம்முயற்சி தொடங்கப்பட்டது. இத்திறனாய்வுத் தேர்வு  நீட், ஜெஇஇ, டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயார்படுத்தும் விதமாகவும் அமைந்தது. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்  விவரம்  முதல் பரிசு – ராகவி., இரண்டாம் பரிசு – மிதுன் திலீப், மூன்றாம் பரிசு – பொன்வாசுதேவன், ஒருங்கிணைப்பாளர்களாக மௌண்ட் சீயோன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் கிருபா ஜெபராஜ்,  வெண்ணிலா, கந்தர்வகோட்டை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் சிவக்குமார், முதல்வர் (விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விராலிமலை) கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவிற்கு தலைமையேற்று சிறப்பான முறையில் மாவட்ட  ஆண்டனி முன்னின்று சிறப்பித்தார், புத்தகங்கள், பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கிய பள்ளிகள், மௌண்ட் சீயோன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி புதுக்கோட்டை, மௌண்ட் சீயோன்  இன்டர்நேஷனல் பள்ளி லேணாவிளக்கு, கற்பக விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை. வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கந்தர்வகோட்டை. வைரம்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி. புதுக்கோட்டை. கோகிலா  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அன்னவாசல்   மற்றும் பங்குபெற்ற மாணவர்கள் அனைவர்க்கும் பங்கேற்பு சான்றிதழும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புத்தகங்களும், சுழல் கோப்பையும் வழங்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

21 − 15 =