புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்,35-ஆம் ஆண்டுவிளையாட்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக ஆரத்தி அருண் காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்க பதக்கம், இயக்குநர் ஸ்மைல் சென்டர் பல்நோக்கு பல் மருத்துவமனை கலந்துக்கொண்டார், கெளரவ விருந்தினராக ரம்யாதேவி புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் கலந்து கொண்டார் .
விளையாட்டு விழாவானது இறைவணக்கப்பாடல் பாட மௌண்ட் சீயோன் பள்ளிக் குழுமங்களின் துணைத் தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன் இறைவழிப்பாட்டுடன் நிகழ்ச்சி துவங்கியது, மௌண்ட் சீயோன் பள்ளிக் குழுமங்களின் தலைவர் ஜோனத்தன் வரவேற்புரை வழங்கினார், நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக பள்ளியின் தலைவர் தேசியக்கொடியை ஏற்றிவைக்க ஒலிம்பிக்கொடியை சிறப்பு விருந்தினர் ஏற்றினார்.
பள்ளிக் கொடியை பள்ளியின் துணைத் தலைவர் ஏற்றி வைத்தார் .சிறப்பு விருந்தினர் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார், பின்னர் சமாதான புறாவை பறக்கவிட்டு ஒலிம்பிக்ஜோதி ஏற்றி விளையாட்டு விழாவினை துவங்கி வைத்தார்.சீயோன் பள்ளிக் குழுமங்களின் துணைத் தலைவர் விளையாட்டு ஆண்டு அறிக்கையினை வாசித்தார், பள்ளியின் கல்விமுதல்வர் குமரேஷ் நன்றியுரை வழங்கினார், நிகழ்ச்சியினை தொடர்ந்து மாணவர்களின் கண் கவரும் கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின, நிகழ்ச்சியினை மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர், நிகழ்ச்சி ஏற்பாட்டை பள்ளி நிர்வாக முதல்வர் கிருபாஜெபராஜ் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.