புதுக்கோட்டை லேனாவிலக்கில் அமைந்துள்ளமௌண்ட் சீயோன் சர்வதேசபள்ளியில் பொங்கல் விழாகொண்டாடப்பட்டது, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பாட்டு, கவிதை, நடனம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளிமுதல்வர் ஜலஜா குமாரி பொங்கல் திருநாள் ஒவ்வொருமாநிலத்திலும் பல்வேறுபெயர்களில் கொண்டாடப்படுகிறது என்றும்,ஆனால் தமிழகத்தில் கால்நடைகளுக்கும் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்படுவதுபோல் வேறுஎந்தமாநிலத்திலும் இல்லை, இந்த தைமுதல் நாள் பொங்கலை மகிழ்சியுடன் கொண்டாடவும்,அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சிபொங்கவேண்டும் என்று இறைவனைபிராத்திப்பதாகஉரையாற்றினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புபொங்கலும்,கரும்புகளும் வழங்கவிழா இனிதேநிறைவுற்றது.