புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவனுக்கு பாராட்டு

உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைசார்பாக, மண்டல அளவிலான பேச்சுப்போட்டி நடைபெற்றது. இப்பேச்சுப்போட்டியில் 6 மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற இப்பேச்சுப்போட்டியில் மௌண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவன் எஸ்.அஸ்வின் அண்ணாமலை மண்டல அளவில் இரண்டாம் பரிசு பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

சாதனை படைத்த மாணவன் எஸ்.அஸ்வின் அண்ணாமலையை மௌண்ட் சீயோன் பள்ளிகளின் தலைவர் ஜோனத்தன் ஜெயபரதன், பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

66 + = 74