புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மௌண்ட் சீயோன் பள்ளிகளின் துணைத் தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றிருந்தார். பள்ளிக் கல்வி முதல்வர் குமரேஷ் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
நிகழ்ச்சியானது வரவேற்பு நடனத்துடன் துவங்கப்பட்டது. பள்ளியின் துணைத் தலைவர் வாழ்த்துரை வழங்கினார் மாணவர்கள் சர்சிவி இராமன் மற்றும் மேரிகியுரி பற்றிய உரையினை அளித்தனர். மாணவர்கள் ஜெல்லி மீன்கள் போல் உடையணிந்து நடனமாடி வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்காட்சியில் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இத்துடன் எ.டி.எல் மாரத்தான்அமைப்பின்அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. மௌண்ட் சீயோன் பள்ளியில் பயிலும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அறிவியலின் வளர்ச்சி, முன்னேற்றத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக நிகழ்ச்சி அமைந்தது .