புதுக்கோட்டை மௌண்ட்சீயோன் மெட்ரிக் பள்ளி மாணவி மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து இமாலய சாதனை

2022-23 – 2023 ஆம்கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு அரசுத்தேர்வில், தமிழ்நாட்டில் மூன்றாவது இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்று மௌண்ட்சீயோன் பள்ளி மாணவி சு. கீர்த்திகா இமாலயசாதனை புரிந்துள்ளார். பள்ளி அளவில் மாணவி சு.கீர்த்திகா 496 மதிப்பெண் பெற்று முதலிடமும், மாணவி பாலசுந்தரி 492 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், மாணவி ஸ்வேதா 485 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.மேலும் ஆங்கிலம், கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.10 ஆம் வகுப்புப்பொதுத்தேர்வில் நூற்றுக்குநூறு மதிப்பெண் 18 மாணவர்கள் பெற்று சாதனைப்படைத்துள்ளனர்.

சாதனைப்புரிந்த மாணவர்களை ஆசிரியர்கள் மற்றும்பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்தி, தங்கள் பாராட்டைத்தெரிவித்தனர், சாதனைப்புரிந்த மாணவர்களை பள்ளி நிர்வாக முதல்வர் கிருபா ஜெபராஜ் மற்றும் உயர்நிலைப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் சாமுவேல் பாராட்டு தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

54 + = 59