புதுக்கோட்டை முன்னாள் காங்கிரஸ் நகர செயலாளர் மதன் பாலசுப்ரமணியனின் முதலாம் ஆண்டு நினைவு நாள் மற்றும் படத்திறப்பு விழா

புதுக்கோட்டை மதன் ஜுவல்லரி உரிமையாளரும் முன்னாள் காங்கிரஸ் நகர செயலாளருமான மதன் பாலசுப்ரமணியனின் முதலாம் ஆண்டு நினைவு நாள் மற்றும் படத்திறப்பு விழா புதுக்கோட்டை தெற்கு மூன்றாம் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் மதன் வரவேற்றார். படத்திறப்பு விழா நிகழ்ச்சியில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு மதன் பாலசுப்பிரமணியன் படத்தை திறந்து வைத்து ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசுப்பு, முன்னாள் நகர்மன்ற தலைவர் துரை திவ்யநாதன், வக்கீல் சந்திரசேகர், தமிழரசன், இப்ராஹிம் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதன், கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்திருந்தனர்.