புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனையில் இலவச இருதய பரிசோதனை முகாம் சட்டத்துறை அமைச்சர் பங்கேற்று தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனையில் இலவச இருதய சிகிச்சை முகாமினை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார் இந்த முகாம் ஒரு மாத காலத்திற்கு நடைபெற இருக்கின்றது.

உலக இருதய தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனை சார்பில் இலவச இருதய பரிசோதனை செப்டம்பர் 2 முதல் 29ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாமினை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார்.

இலவச இருதய பரிசோதனை முகாம் குறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பெரியசாமி கூறுகையில்: இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தேவையான சிகிச்சை எடுப்பதன் மூலம் இருதய சம்பந்தப்பட்ட உயிரிழப்பை தடுப்பது இந்த மாபெரும் இலவச மருத்துவ முகாமில் நோக்கமாகும். இருதயம் காப்போம் புதுக்கோட்டை என்ற வாக்கியத்தின் படி நமது புதுக்கோட்டை மக்களின் இதயத்தை பாதுகாத்து வருமுன் காப்போம் என்ற கூற்றுப்படி அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் மேற்கொண்டு அவர்களின் இதயம் குறித்த மதிப்பெண்ணை வழங்குவதே இதன் நோக்கம் என்றும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த பரிசோதனை, எக்கோ, இசிசி, இருதய மருத்துவரின் ஆலோசனை முதலியவை முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் செயல் அலுவலர் பிரேம் குமார் ராஜன் வரவேற்றார்.

விழாவில் இருதயவியல் மருத்துவர் மனோஜ், இருதய அறுவை சிகிச்சை மருத்துவர் சரவணன் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மக்கள் தொடர்பு அதிகாரி பார்த்திபன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =