புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டத்துடன் இணைந்து குழந்தைகளுக்கான கோடைகால பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இது குறித்து மாவட்ட மைய நூலக அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தற்போதைய சூழலில் இணையதளம், தொலைக்காட்சி, கைபேசி போன்ற சாதனங்களில் மூழ்கியுள்ள குழந்தைகளிடம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கவும், நூலகத்திற்கு வரவழைக்கவும் அர்களிடம் இருக்கும் பல்வேறுதிறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் 10 வயதிலிருந்து 15 வயதுவரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் 27.5.2023 சனிக்கிழமையன்று நூல் வாசிப்பு(வாசித்தபுத்தகம்குறித்துகட்டுரைஎழுதுதல்) 28.05.2023 ஞாயிற்றுகிழமை ஓவியப் போட்டி (சுற்றுசூழல் விழிப்புணர்வு குறித்து ஓவியம் வரைதல்) இப்போட்டியில் கலந்துகொள்பவர்கள் ஓவியம் வரைவதற்க்கானஅனைத்துபொருட்களும் கொண்டுவரவேண்டும்.
29.05.2023 திங்கள்கிழமை கதை சொல்லுதல் போட்டி (படம் பார்த்துகதைசொல்லுதல், கவிதைஎழுதுதல், கட்டுரை எழுதுதல்) மேற்படி போட்டிகள் அனைத்தும் காலை 10.00 மணிமுதல் 12.30 மணிவரைநடைபெறும், இப்போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் தொடர்புக்கு தொலைபேசியிலோ (9965748300, 7695887997) அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம், இத்தகவலை புதுக்கோட்டை மாவட்டமைய நூலக முதல்நிலை நூலகர் கி. சசிகலா தெரிவித்துள்ளார்.