புதுக்கோட்டை மாவட்ட மனநல மையத்தில் பொங்கல் விழா

தமிழ்நாடு அரசு, மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் புதுக்கோட்டை டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் நினைவு  அரசு மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட மனநல மையம் செயல்படுகிறது. 

இம்மையத்தில் ஆதரவற்று சாலைகளில் உலாவும் மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஒருங்கிணைந்த மனநல மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சேவைகள் வழங்கப்படுகிறது. மாவட்ட மனநல சிகிச்சை மையத்தில்மாவட்ட மனநல மருத்துவர் தலைமையில், மனநல பணியாளர்கள் செவிலியர்கள்  ஒருங்கிணைந்த மனநல சிகிச்சை  அளித்து வருகின்றனர்.

இதன் மூலம் பலரும் மன நோயிலிருந்து  குணமடைந்த பின்னர், அவர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் உறவினர்களிடம் சேர்துவைக்கப்படுகின்றனர். அவ்வாறு  குணமடைந்து செல்லும் நபருக்கு அவர் வசிக்கும் மாவட்டத்தில் வீட்டிற்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற உறவினர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது.இதுவரை புதுக்கோட்டை மாவட்ட மனநல சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்ட  200-க்கும் மேற்பட்டோருக்கு மறுவாழ்வு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று அம்மையத்தில் நடைபெற்ற  சமத்துவ பொங்கல் விழாவை மனநல திட்ட பயனாளிகள்,  மருத்துவர்கள், செவிலியர்கள், இதர மனநல பணியாளர்களுடன் கொண்டாடினர்.பயனாளிகளுக்கு கோலப்பொட்டி, இசை நாற்காலி, பலூன் ஊதுதல் போன்ற போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பயனாளிகள் ஆர்வத்தோடு பங்கேற்று மகிழ்ந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

62 − = 53