தமிழக முழுவதும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ மற்றும் துறை வைகோ ஆகியோர் தமிழக முழுவதும் மதிமுக சார்பில் உட்கட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டனர்.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் ஐந்தாவது அமைப்பு தேர்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கிளை கழகம், ஒன்றிய கழகம், நகர கழகம் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்தல் மூலம் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்தனர். மேலும் மாவட்டச் செயலாளர் மற்றும் அவை தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளராக யாரும் போட்டியிடுவதற்கு விருப்பு மனு வழங்காததால் போட்டியின்றி புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக எஸ்.கே.கலியமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.
அதேபோல் அவைத்தலைவராக ஆரோக்கியசாமி, பொருளாளராக ராஜா ஆதிமூலம், துணைச் செயலாளராக முத்தையா, சுப்பையா, செல்வராணி, மதியழகன் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் என பல்வேறு பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.