புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறந்தாங்கியில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள 53 துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரி அறந்தாங்கியில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 15.10.2020-ம் ஆண்டு 53 தற்காலிக துணை வட்டாட்சியர்கள் பணிபுரிந்து நிர்வாகம் சீராக நடைபெற்று வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 15.10.2020 இன் தீர்ப்பாணையில் 15.10.2020 அன்றைய நிலை தொடர வேண்டும் என தீர்ப்பாணை வழங்கப்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகத்தால் 8.11.2020 அன்று நீதிமன்ற ஆணையை கருத்தில் கொள்ளாமல் 53 தற்காலிக துணை வட்டாட்சியர்கள் பதிவியிறக்கம் செய்யப்பட்டனர். எனவே, தமிழக அரசால் அறிவிக்கப்படும் பொதுமக்கள் சார்ந்த நலத்திட்டங்களை தீர்வு செய்ய ஏதுவாக உடனடியாக 8.11.2020 அன்று பதவியிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக துணை வட்டாட்சியர்களுக்கு உடன் பதவி வழங்க வேண்டும் என்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும் 2021ஆம் ஆண்டு வட்டாட்சியர் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் அல்லது தற்காலிக வட்டாட்சியர் பதவி உயர்வு வழங்க வேண்டும், அரசு அடிப்படை பயிற்சி மற்றும் நில அளவைப் பயிற்சிகளை உடன் இணையவழிப் பயிற்சியாக வழங்கிட வேண்டும் என்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.