புதுக்கோட்டை மாவட்ட நலக்கல்வி அலுவலர் தமிழ்ச்செம்மல்  கவிஞர் ஜீவிக்கு  பணிநிறைவு பாராட்டுவிழா

புதுக்கோட்டை மாவட்ட நலக்கல்வி அலுவலராக இருந்து பணிநிறைவு பெற்ற“தமிழ்ச்செம்மல்” கவிஞர் ஜீவிக்கு மருத்துவ பணிகள் தொழுநோய் அலுவலகத்தில், மாவட்ட துணை இயக்குநர் பணிவிடுப்பு ஆணையை வழங்கி  சால்வை அணிவித்து நினைவுபரிசு வழங்கி வாழ்த்தினார். தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்), துணை இயக்குநர் (குடும்பநல பணிகள்) மற்றும் நிர்வாக அலுவலர் (குடும்பநலம்) இணைஇயக்குநர் ராமு, மற்றும் அலுவலக கண்காணிப்பாளர்கள், அலுவலக பணியாளர்கள் வாழ்த்தி பாராட்டினர்.

அறந்தாங்கி ராஜேஸ்வரி மஹாலில் பணிநிறைவு பாராட்டுவிழா நடைபெற்றது. இதில் அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் அன்பரசு, தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை அலுவலர், சங்க மாநில பொது செயலாளர் அன்பு நிலவன், துணை இயக்குநர் (மருத்துவ பணி ஓய்வு) சாமியப்பன், இணை இயக்குநர் ராமு, புதுக்கோட்டை சிபிஎம் மாவட்ட செயலாளர் கவிவர்மன், அரசு ஊழியர் சங்க பொருளாளர்    ரமாராமநாதன், ரெங்கசாமி, த.மு.எ.ச கவிஞர் முத்துநிலவன், புதுக்கோட்டை மாவட்ட புத்தக திருவிழா குழுவினர்கள் ராஜ்குமார், மணவாளன், வீர்முத்து , பிரபாகர், முத்துகுமார், ரோட்டரி சங்க  வர்த்தக சங்கம், அரசு ஊழியர்கள், தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை அலுவலர் சங்கம் மாவட்ட மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு “தமிழ்ச்செம்மல்”கவிஞர் ஜீவியை பாராட்டி வாழ்த்தி விழாவினை சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அஜீத், சுஜீத், லேப்டெக்னீசியன் வாணிவெங்கட்ராமன், பீர்முகமது ஆகியோர் கவனித்தனர். நிறைவாக ஜீவி நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

56 − 48 =