மகளிர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் மாவட்ட மகளிர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உலக மகளிர் தின விழா மாவட்ட மகளிரணி தலைவர் கௌரி தலைமையில் நடைபெற்ற விழாவில். மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் முருகேசன், மாநில பொதுச் செயலாளர் பெனட் அந்தோணிராஜ், வேங்கை அருணாசலம், ஓபிசி அணித்தலைவர் வீர.துரைசிங்கம், மாவட்ட துணை தலைவர்கள் செம்பை மணி, எம்ஏஎம் தீன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மதன் கண்ணன், பாருக்ஜெய்லானி, வட்டார தலைவர் சூர்யா பழனியப்பன், நாச்சிமுத்து, மதன், நகர நிர்வாகிகள் குமரேசன், பாண்டியன், விக்ரம், அருள் சகாயராஜ், மகளிரணி நிர்வாகிகள் அஞ்சனா தேவி, ஜெயா சின்னப்பொண்ணு, வீரம்மாள், ஜோதி உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.