புதுக்கோட்டை மாவட்ட அர்ச்சகர்கள் சமூக நல சங்க கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட அர்ச்சகர்கள் சமூக நல சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன்படி, தலைவராக குமரமலை வைரவமூர்த்தி, செயலாளராக குன்றாண்டார்  கோயில் குமாரசாமி, பொருளாளராக திருக்கட்டளை ராஜா, அமைப்பு செயலாளர் நமணசமுத்திரம் வினோத், கொள்கை பரப்பு செயலாளராக திருப்புனவாசல் வேதாரண்யேஸ்வரர், கௌரவத் தலைவராக புதுக்கோட்டை ரவி சுவாமிநாத மற்றும் துணைத்தலைவர், துணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் கூட்டத்தில் புதிதாக அமைந்துள்ள மாநில அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வது, மறைந்த முன்னாள் மாவட்டத்தின் சங்க சிவாச்சாரியார்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வது, தமிழக அரசு அறிவித்துள்ள அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஆணையினை திரும்பப்பெற வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.