புதுக்கோட்டை மாவட்டம் மழைக்காலத்தையொட்டி வரத்துவாய்க்கால் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நேரில் ஆய்வு

புதுக்கோட்டை நகராட்சி, புதிய பேருந்துநிலையம் எதிரில், மழைக்காலத்தையொட்டி வரத்துவாய்க்கால் தூர்வாரும் பணியினை, மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனிற்காக எண்ணற்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி இன்றையதினம் புதுக்கோட்டை நகராட்சி, புதிய பேருந்துநிலையம் எதிரில், மழைக்காலத்தையொட்டி வரத்துவாய்க்கால் தூர்வாரும் பணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இந்த வரத்துவாய்க்கால்கள் தூர்வாருவதன் மூலம் மழைக்காலங்களில் மழைநீர் தேக்காமல் சீராக செல்வதற்கு உதவியாக இருக்கும். மேலும் வரத்துவாய்க்கால்களை உரிய காலத்திற்குள் விரைவாக தூர்வாரிட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, நகராட்சி பொறியாளர் இப்ராஹிம், உதவிப் பொறியாளர் கலியகுமார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.