புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் :அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இவ்வாண்டின் முதல் ஜல்லிக்கட்டு இதில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் இன்று  காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு பொறுப்பாளர்  கேகே.செல்ல பாண்டியன், புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வை.முத்துராஜா, கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எம்.சின்னதுரை மற்றும் நிர்வாகிகள் முன்னோடிகள் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  தமிழகத்தில் இந்த ஆண்டில் (2022) நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இதுவாகும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி ஜல்லிக்கட்டு நடைபெற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் 300 மாடுபிடி வீரர்கள் மற்றும் 700 காளைகள் பங்கேற்றுள்ளன.  தற்போது சீறிப்பாய்ந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் வீரத்துடன் அடக்கி பரிசுகளைத் தட்டிச்சென்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

51 + = 60