புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் சாலை மறியல்

2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு அதனால் பொதுமக்கள் அவதி.

எந்த ஒரு அடிப்படைவசதியும் இல்லை என்று உடனடியாக எல்லா வசதிகளையும் எங்கள் கிராமத்திற்கு செய்து தரக்கோரி மத்திய மாநில அரசை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியல். நாகப்பட்டினம் ராமேஸ்வரம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு அதனால் பொதுமக்கள் அவதி.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட நாட்டாணி புரசக்குடிஊராட்சியில் உள்ள கோபாலபட்டினம் கிராமத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இந்த கிராமத்தில் சரியான சாலை வசதி இல்லை என்றும் போதிய குடிநீர் வசதி இல்லை என்றும் எங்கு பார்த்தாலும் குப்பை கிடங்காக கிராமம் மாறி உள்ளதாகவும் அதை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் அக்கிராம ஜமாத்தார்களும்ஒன்றிணைந்து கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை 10 மணி அளவில்சாலை மறியல் செய்தனர். அதனால் ராமேஸ்வரம் நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகளும் அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து 2 மணிநேரம்பாதிக்கப்பட்டது .அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதியுடன் இருந்தனர்

அதில் ஜமாத்தை சேர்ந்த முகமது அலி ஜின்னா என்பவர் கூறுகையில் எங்கள் கிராமத்தில் உள்ளவர்கள் தான் எங்கள் ஊராட்சியிலேயே ஊராட்சி தலைவராகவும் , துணைத் தலைவராகவும்,

 ஒன்றிய குழு உறுப்பினராகவும் உள்ளனர் இவர்களுக்குள் நடக்கும், கோஸ்டி முரண்பாடு காரணமாக எந்த ஒரு வேலையையும் அவர்கள் ஊராட்சி சம்பந்தமாக பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

அதன் பிறகு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொறுப்பாளர் நாகராஜன் என்பவர் கூறுகையில் இந்த பகுதிக்கு கடந்த 15 தினங்களுக்கு முன்னால் நாங்கள் வந்து பார்த்தபோது இது கிராமமே இல்லை குப்பை கூடாரமாக இருந்தது என்றும் அதனால் தான் அனைத்து அதிகாரிகளிடம் பேசியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்ற காரணத்தால் இன்று ஜமாத்தார்கள் உடன் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.அதன் பிறகு இங்கு வந்த ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் வில்லியம்ஸ் மோசஸ்மற்றும் காவல் துறையினர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி குப்பைகளை உடனடியாக அகற்றி விடுகின்றோம் என்றும். வரும் 30 நாட்களுக்குள் சாலைகளை சரி செய்து, கொடுக்கிறோம் என்று வாக்குறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் தற்சமயம் கைவிடப்பட்டது.நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

30 + = 37