புதுக்கோட்டையில் தேர்வுக்கூட அரங்கில் மாவட்டக்கல்வி அலுவலர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பள்ளிகளின் இணை இயக்குனர் சி.செல்வராஜ் தலைமை வகித்து சிறந்த பள்ளிக்கான விருதுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி முன்னிலையில் வழங்கினார்
அதில் 2019-2020-ம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான விருதுகள் அறந்தாங்கி கல்வி மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம்,கொத்தமங்கலம் (மையம்) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு அப்பள்ளியின் தலைமையாசிரியை செல்வராணிக்கு சிறப்பு விருது கேடயம் வழங்கி பாராட்டினார். இதேபோல்,புதுக்கோட்டை கல்வி மாவட்டம்,திருமயம் ஒன்றியம்,மேலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிதலைமையாசிரியை மாலா, இலுப்பூர் கல்வி மாவட்டம்,, அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் அந்தோணிராஜூக்கும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் மஞ்சுளா, அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் ராஜாராமன், இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் மணிமொழி, மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு, பள்ளிக்கல்வியின் மாவட்ட உதவித்திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், நேர்முக உதவியாளர்கள், வட்டாரக்கல்வி அலுவலர் கே.நடராஜன் உள்ளிட்டோர் பள்ளித்துணை ஆய்வாளர்கள்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.