
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற 11 ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சிரம்யாவை சந்தித்து வாழ்த்துபெற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2022-2023 ஆண்டிற்கு டாக்டர் இராதகிருஷ்ணன் விருதினை பல்வேறு தகுதிகள் அடிப்படையில் மாநிலத் தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட ஆவுடையார்கோயில் ஒன்றியம், பெரிய செங்கீரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் மு.காளிமுத்து, ஆவுடையார்கோயில் ஒன்றியம், தீயூர் ஆவணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் சு.பாலு, அன்னவாசல் ஒன்றியம், இலுப்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் செ.ஜெயராஜ், அரிமளம் ஒன்றியம், கல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் ஆ.சாந்தி,
அன்னவாசல் ஒன்றியம், கொத்தமங்கலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் வீ்.சரோஜா, அறந்தாங்கி அத்தாணி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் கா.சேகர், குழிபிறை மு.சி.த.ராம.இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியின் முதுகலை ஆசிரியர் மா.செல்வமணி, புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் மா.மதியழகன், திருமணஞ்சேரி அரசு உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் வி.டைய்ட்டஸ், அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் எம்.கவிதா, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் இ.அபிராமசுந்தரி ஆகியோருக்கு கடந்த 5 ந்தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் கல்வித்துறை உயர் அலுவலர்கள் விருதினை வழங்கினார்கள்.
அதனைத்தொடர்ந்து விருது பெற்ற 11 ஆசிரியர்களும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சிரம்யா சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மஞ்சுளா, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.