
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் முறையாக முத்துமீனாட்சி மருத்துவமனை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது.
மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பிரசாத் பதக் என்கிற நோயாளி கல்லீரல் செயல் இழப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவருக்கு செப்டம்பர் 5 ம் தேதி புதுக்கோட்டை முத்துமீனாட்சி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்றும்.

முன்னதாக சாலை விபத்து ஏற்பட்டு திருச்சி அரசு மகாத்மா காந்தி மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த நபரின் கல்லீரல் தானமாக பெற்று இம்மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. புதுக்கோட்டை முத்துமீனாட்சி மருத்துவமனை மருத்துவர்களும் சென்னை குளோபல் மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் குழுவும் இணைந்து வெற்றிகரமாக இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை செய்தனர். தற்போது பிரசாத் பகத் நலமுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.