புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல், போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 388 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்  இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், தலா ரூ.1,350 வீதம் 12 பார்வைதிறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16,200 மதிப்பிலான பிரெய்லி கைகடிகாரங்களை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.

மேலும் ஆப்பிரிக்கா நாடான உகாண்டா நகரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் தரவரிசை பேட்மின்டன் போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம், ஒடுகம்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கலந்துகொண்டு வெள்ளி பதக்கங்களை வென்றதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், தமிழ்நாடு பாரா பேட்மின்டன் சங்க துணைத் தலைவர் வி.சரவணன், தமிழ்நாடு பாரா பேட்மின்டன் சங்க மாவட்ட செயலர் டாக்டர்.டி.ராமன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

64 − = 63