புதுக்கோட்டை மாவட்டத்தில்  பசுமை போர்வையினை அதிகப்படுத்தும் வகையில்  3 ஆண்டுகளில் 1.5 கோடி மரக்கன்றுகள் நடப்படவுள்ளது: கலெக்டர் தகவல்

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், வனத்துறையின் சார்பில் மாவட்டத்தின் பசுமை போர்வையினை அதிகரிப்பதற்காக செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்த மாவட்ட பசுமைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதாராமு  தலைமையில் இன்று நடைபெற்றது. அதன் பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது;

தமிழக அரசால் அடுத்த 10 ஆண்டுகளில் பசுமைப் போர்வையினை தற்போது உள்ள 23.27 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயர்த்திட பசுமை தமிழக இயக்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் இலக்கினை அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 7.89 சதவீதம் மட்டுமே உள்ள பசுமைப் போர்வையினை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக உயர்த்த ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50.20 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.

இந்த இலக்கினை நிறைவு செய்யும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட பசுமைக் குழு அமைக்கப்பட்டு மாவட்ட வன அலுவலர் செயலாளராக செயல்பட உள்ளார். அதன்படி 2023-24, 2024-25, 2025-26 ஆகிய நிதியாண்டுகளில் காவல்துறை, வனத்துறை, வருவாய்துறை, ஊரக வளர்ச்சித் துறை, இந்து சமய அறநிலையத்துறை, வேளாண்மைத் துறை, பள்ளிக் கல்வித்துறை, நெடுஞ்சாலை மற்றும் பொதுப் பணித்துறை உள்ளிட்ட 18 துறைகளின் வாயிலாக நடவு செய்ய வேண்டிய மரக்கன்றுகள் குறித்த இலக்கீடு ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள காலத்திற்குள் முழுமையாக நிறைவு செய்யும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்   கவிதாராமு தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் பிரபா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெரினா பேகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தங்கவேல் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 2 = 9