புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 2 லட்சம் பேர் புத்தகம் வாசித்து சாதனை

5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு ‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ என்ற தலைப்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில், ஒரே நேரத்தில் சுமார் 2 லட்சம் பேர் புத்தகம் வாசித்து சாதனை படைத்தனர்.புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து வருகின்ற ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை 5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடத்துகிறது. புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கலை, இலக்கியப் போட்டிகள், சிறந்த புத்தகங்களக்கான விருதுகள், இலக்கிய சொற்பொழிவுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக  மாணவர்கள், வாசகர்கள், பொதுமக்கள் மத்தியில் புத்தகத்தின் அவசியத்தை விளக்கும் வகையில் ‘ புதுக்கோட்டை வாசிக்கிறது’ என்ற தலைப்பில் நேற்று வாசிப்பு இயக்கம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகன் என 1976 பள்ளிகளிலும், நூற்றுக்கும் மேற்பட்ட கலை அறிவியல், பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரிகளிலும், 92 நுலகங்களிலும் நேற்று காலை 11.30 மணியிலிருந்து 12.30 வரை ஒரு மணி நேரம் மாணவர்கள் மற்றும் வாசகர்கள் தனக்குப் பிடித்த புத்தகங்களை வாசித்தனர். மேலும், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் அவரவர் பணியிடங்களில் இருந்து இந்த வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்றனர். ஒட்டுமொத்தமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்றுள்ளதாக புத்தக விழாக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.புதுக்கோட்டை ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாசிப்பு இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தொடங்கி வைத்தார். மேலும், மாணவிகளுடன் அமர்ந்து புத்தகம் வாசித்து அவர்களை உற்சாகப் படுத்தினார்.

நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட நூலக அலுவலர் அசிவக்குமார், புத்தக விழாக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் தங்கம்மூர்த்தி, முத்துநிலவன், மணவாளன், ராஜ்குமார், பாலகிருஷ்ணன், வீரமுத்து, முத்துக்குமார், விமலா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும், மாவட்டம் முழுவதும் நடைபெற்ற புத்தக வாசிப்பு நிகழ்வுகளில் அரசு அலுவலர்கள், அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =