புதுக்கோட்டை மாவட்டத்தில் 750 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் :கலெக்டர் புதிய தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கோவிட் -19 தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்த வருவோருக்கான அடையாள அட்டை விபரத்தை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு அறிவித்துள்ளார் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவிட் -19 மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருகிற 18 வயதிற்கு மேற்பட்டோர் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் அடையாள அட்டை,  பான் கார்டு, ஓய்வூதிய புத்தகம், குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்ற அட்டையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை காண்பித்து மெகா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். 12.09.2021 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 750 இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறவுள்ள இம்முகாம்களில் பொதுமக்கள் தவறாமல் கலந்துகொண்டு, இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.