புதுக்கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளுக்குள் வாழும் மான்களை பாதுகாத்திட மாவட்ட நிர்வாகத்திற்கு நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.அக்கட்சியின் மாவட்டத்தலைவர் கா.காவுதீன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
மாவட்ட ஆட்சித்தலைவரம்மா,மாவட்ட காவல் கண்காணிப்பாளரம்மா, மாவட்ட வனத்துறை வனவிலங்குகள் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவருக்கும் எனதன்பான வேண்டுகோளுடன் கூடிய வணக்கம். இலுப்பூர்தாலுகா, அன்னவாசல் ஒன்றியம், வயலோகம், குடுமியான்மலை ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு அரசு அண்ணாபண்ணை மற்றும் தோட்டக்கலைதுறைக்கு சொந்தமான பகுதிகளிலும் தைலமரக்காடுகள் உள்ள புல்வயல் ஊராட்சி பகுதிகளிலும் “மான்கள்” நிறைய நடமாடி வருகிறது.
கூட்டமாக வாழ்ந்துவரும் மான்களை அப்பகுதி மக்கள் அனைவரும் கண்டு வருகின்றனர் இந்நிலையில் மான்களை வேட்டையாடும் நோக்கில் சில சமூகவிரோதிகள் இரவுபகலென்று பாராமல் குறிப்பாக இரவு நேரங்களில் முகக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் துப்பாக்கிகளுடன் இப்பகுதிகளில் சுற்றி பதுங்கி மான்களை சுட்டு வேட்டையாட வருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்அனைவரும் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு மேற்கண்ட பகுதியில் வாழும் மான்களை காத்திட பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர் தந்தை பெரியார் சிலையை அமைத்திட வலியுறுத்தியும் உள்ளார்.

அன்னவாசலில் பெரியார் சிலை
சமூகநீதியின் சிற்பி அறிவுலக ஆசான் அய்யா பெரியாருக்கு நூறு கோடி ரூபாயில் முழு உருவச்சிலை வைப்பதாக அறிவித்துள்ள தமிழக முதல்வர் தனது தந்தை முன்னாள்முதல்வர் கருணாநிதியால் தமிழகமெங்கும் அமைக்கப்பட்ட பெரியார் சமத்துவபுரங்கள் முன்பு பெரியார் சிலைகள் வைக்க உத்தரவிட்டு அதன்படியே சமத்துவபுரங்கள் முன்பு பெரியார் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் விதிவிலக்காக அன்னவாசல் சமத்துவபுரத்தின் முன்பாக இதுவரை பெரியார்சிலை நிறுவப்படவில்லை எனவே தமிழகமுதல்வரின் கீழ் பணிபுரியும் அரசு அதிகாரிகளும் அவர் சார்ந்த கட்சி நிர்வாகிகளும் உடனடியாக செயல்பட்டு அன்னவாசல் சமத்துவபுரத்தின் முன்பாக அய்யாபெரியார் சிலை வைக்க வேண்டுமாய் பணிந்து கேட்டுக்கொள்கிறேன் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.