புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியின் வணிகவியல் துறைக்கு முன்னாள் மாணவர்கள் பங்களிப்பு

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியின் வணிகவியல் துறைக்கு முன்னாள் மாணவர்கள் யு.பி.எஸ் வசதியுடன் கூடிய  ஆறு கணிப்பொறிகளை வழங்கினர்.

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியின் வணிகவியல்  துறைக்கு  1970 முதல் 1973  வரை பி.காம்  படித்த முன்னாள்  மாணவர்கள்   வருகை  தந்தனர்.  அவர்களை   கல்லூரி  முதல்வர் திருச்செல்வம்,  துறைத்தலைவர் கலைச்செல்வி,  தேர்வு நெறியாளர் கணேசன்,  பேராசிரியர்கள்  மற்றும்  மாணவ, மாணவியர் வரவேற்றனர். முன்னாள் மாணவர்கள் வணிகவியல் துறைக்கு யு.பி.எஸ் வசதியுடன் கூடிய  ஆறு கணிப்பொறிகளை  மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர்.

இதற்கென அமைக்கப்பட்ட வணிகவியல் துறை கணினி ஆய்வகம் நேற்று (திங்கட்கிழமை) கல்லூரி முதல்வர்  மற்றும்  முன்னாள் மாணவர்களால் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. முன்னாள்  மாணவர்களால்  வழங்கப்பட்ட கணிப்பொறிகள் தங்கள் படிப்பிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என வணிகவியல் துறை மாணவ மாணவிகள் தெரிவித்தனர். மேலும் அவர்களுக்கு தங்களது நன்றியினையும் மாணவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

79 + = 87