Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக...
Homeஅரசியல்புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் சாலையோர மாலைநேர பூங்கா நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா திறந்து வைத்தார்

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் சாலையோர மாலைநேர பூங்கா நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா திறந்து வைத்தார்

புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையம் அருகில், (பெரியார் நகர் செல்லும்) டி.டி.பிளான்சாலையில், சாலையோர மாலைநேர பூங்காவினை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையம் அருகில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திட்ட நிதியிலிருந்து ரூ.65 இலட்சம் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிறப்பு நிதி ரூ.24 இலட்சம் என மொத்தம் ரூ.89 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா திறக்கப்பட்டது. இந்த பூங்காவில் சிறுவர், சிறுமிகள் விளையாடுவதற்காக விளையாட்டு உபகரணங்களும், பொதுமக்கள் மாலை நேரங்களில் அமர்ந்து இளைப்பாருவதற்காகவும், பூச்செடிகளுடன் கூடிய அமருமிடங்களும், எழிலார்ந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இயற்கை எழில்சார்ந்த கண்கவர் ஓவியங்களும், சிறப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்றத் துணைத் தலைவர் எம்.லியாகத் அலி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகராட்சி ஆணையாளர் (பொ) எஸ்.டி.பாலாஜி, வட்டாட்சியர் விஜயலெட்சுமி,திமுக நகரச்செயலாளர் செந்தில், நகர்மன்ற உறுப்பினர்கள் செந்தாமரை பாலு, காதர்கனி, ஜெயலட்சுமி, குமாரவேலு,க.லதா,பழனிவேல், சுகாதார ஆய்வாளர் மகாமுனி, வருவாய் ஆய்வாளர் விஜயஸ்ரீ, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

x
error: Content is protected !!
%d bloggers like this: