
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கந்தர்வகோட்டையில் புத்தகத் திருவிழாவிற்கான கலை இலக்கிய போட்டிகள் கந்தர்வகோட்டை வட்டாரத் தலைவர் ரகமதுல்லா தலைமையில் தொடங்கியது. வட்டாரச் செயலாளர் சின்னராஜா அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, மீனம்பாள், மாவட்ட இணைச்செயலாளர் துரையரசன் , ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் முத்துக்குமார் போட்டியை தொடங்கி வைத்து பேசும்பொழுது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கலை இலக்கிய போட்டிகள் ஒன்றிய அளவில் ஜுலை 14 ஆம் தேதி ஒன்றிய அளவிலான போட்டியில் நடைபெற்றது.இப்போட்டிகள் 6-8,9-10,11-12 என தனித்தனி பிரவாக நடைப்பெற்றது, ஒன்றிய அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள் மட்டுமே மாவட்ட அளவிலான நிறைவு போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுவர். ஒன்றிய அளவிலான போட்டிகளுக்கு ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு இருவர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
போட்டியின் நடுவர்களாக தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி,மீனம்பாள், புவனேஸ்வரி, முருகன்,தனலெட்சுமி, உடற்கல்வி ஆசிரியர் பரிமளா,காரத்திகா தேவி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் தமிழ்மணி,தவமணி ,இந்துமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.