புதுக்கோட்டை பார்வைத்திறன் குறையுடையோருக்கான பள்ளியில் காமராஜர் பிறந்த விழா

கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த நாளான இன்று பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

இதில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் ரயில் நிலையம் அருகில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளிக்கு சென்று நகராட்சி தொடக்கப் பள்ளியில் படிக்கும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள 227 பள்ளி மாணவர்களுக்கு பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர், ஷார்ப்னர், மற்றும் வண்ண பேனாக்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி காமராசரின் கல்வி வளர்ச்சிக்கு ஆதாரமாக பள்ளி மாணவர்கள் செயல்பட்டார்கள்.

பேனா பென்சில் இவற்றை கொண்டு எங்களால் எழுத முடியவில்லை பார்வை உள்ள படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கலாம் என்று மாணவர்கள் விருப்பம் தெரிவித்ததின் பேரில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது,  இந்த கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பார்வையற்ற பள்ளி மாணவர்கள் உற்சாகத்தோடு எழுது பொருட்களை வழங்கி மிக்க மகிழ்ச்சி உடன் பள்ளிக்கு திரும்பினார்கள்.

இந்த கல்வி வளர்ச்சி நாளின் தொடர்ச்சியாக  பள்ளியிலேயே காமராசர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக  கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பாலிகிராப்ட் கம்பெனி உரிமையாளர் கார்த்திக் மற்றும் அமிர்தம் ஸ்டோர் உரிமையாளர் தனசேகர், இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்தார்கள், மேலும் பள்ளியின் தலைமையாசிரியர் வடிவேலன் சிறப்புறையாற்றினார்.

பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் காமராசரை பற்றி பேசினார்கள் பள்ளி மாணவர்கள் காமராசரின் புகழை போற்றும் விதமாக நடனம் மற்றும் பாடல் இசைத்தார்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.