புதுக்கோட்டை நூற்றாண்டுகண்ட மன்னர்  அரண்மனையில் நூற்றியோரு பாரதிகள் அணிவகுப்பு

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மகாகவிபாரதியின் 101வது நினைவு நாளை முன்னிட்டு  101 மாணவர்கள் பாரதி வேடமணிந்துசென்று மாவட்ட ஆட்சியரிடம் பாரதியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

நூற்றாண்டு கண்டமன்னரின் அரண்மனையில் 101 மழலைபாரதிகளும் அணிவகுத்து வலம் வந்து மாவட்ட ஆட்சியர் கவிதாராமுவை சந்தித்து பாரதியார் பாடல்கள்,   பாரதியார் கவிதைகள்,பாரதியார் வரலாறு என பாரதி பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

இது பற்றி பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி கூறும்போது“ எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்றபாரதியின் கருத்தைதலை மேற்கொண்டு செயல்பட்டு,சமீபத்தில் சுதந்திர தின விழாவில் கொடி ஏற்ற வாய்ப்பு மறுக்கப்பட்டபட்டியல் இனத்தைச் சேர்ந்த சேந்தாங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசன் முன்னிலையில் கொடி ஏற்றவைத்து மிகச்சிறந்த பாரட்டைப் பெற்று புதுக்கோட்டையின் புதுமைப்பெண்ணாக வலம் வருகின்ற அரசு நிர்வாகத்தில் மட்டுமல்ல மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியிலும் சிறப்பாக செயல்படுகின்ற புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்க்கு வாழ்த்துகள் தெரிவிக்கும் வகையில் எம் பள்ளியின் 101 பாரதிகள் அணிவகுத்து வந்திருந்தனர். இதுமாதிரிதேசியத் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள்களை குழந்தைகளைக் கொண்டாடவைப்பதின் நோக்கம் அவர்ளுக்கு தேசவிடுதலைக்காகவும் பெண்விடுதலைக்காகவும் போராடிய சமூகநீதிகாத்ததலைவர்களின்  வரலாறுகளைஅறியச்செய்வதேஆகும் எனக் குறிப்பட்டார்.

மாவட்ட ஆட்சியர் பாரதிவேடமிட்ட பள்ளிக் குழந்தைகளை அன்போடு வரவேற்று வாழ்த்தினார், பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல் உள்ளிட்டஆசிரியர்கள் குழந்தைகளைஅழைத்து வந்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 3