புதுக்கோட்டை நரிமேடு அருகே மேலும் ஓரு கல்மரம் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் நரிமேடு பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களால் கல்மரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்ற புதுகை பாண்டியன் என்பவர் களஆய்வு மேற்கொண்டதில் இந்த கல்மரம் துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இவர் தொல்லியல் ஆய்வுகளிலும் கள ஆய்வுகளிலும் பல்வேறு அறிய தொல் பொருட்களை கண்டறிந்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் பொற்பனைக்கோட்டை அகழாய்வின் இயக்குனர் பேராசிரியர் இனியனிடம் இந்த கல்மரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கல் மரத்துடன் புதுகை பாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 30 = 32