புதுக்கோட்டை நகரில் விநாயகர் சிலைகள் விற்பனை கடந்தாண்டுகளை ஒப்பிடுகளையில் இந்தாண்டு மந்தம்

புதுக்கோட்டை நகரில்  சாந்தநாததிருக்கோவில்  அருகே உள்ள ஜிடிஎன் பூஜை பொருட்கள் விற்பனை கடையில்  விநாயகர் சிலைகளை அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பினும் கடந்தாண்டுகளை ஒப்பிடுகளையில் இந்தாண்டு மந்தமாகவே உள்ளது அரசின் கட்டுப்பாட்டால் பொதுமக்கள் குறைந்த அளவிலேயே வாங்கி செல்கின்றனர். நகரில் பல்வேறு பகுதிகளில்  விநாயகர் சிலைகள் விற்பனை நடந்து வந்தாலும் பெரிய அளவில் விற்பனையில்லை.

இந்துக்களின் முழு முதல் கடவுளாக விளங்கும் விநாயகரை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது . இவ்விழாவானது விநாயகரின் பிறந்தநாளாகவும் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதும் பின்னர் அவற்றை ஊர்வலமாக எடுத்த சென்று நீர் நிலைகளில் கரைப்பதும் வழக்கம்.


இந்தநிலையில் வருகிற 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா நோய் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும், மத்திய-மாநில அரசுகள் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி வழங்கவில்லை.அதனால், பொதுமக்கள் தங்களது வீடுகளில் வைத்து வழிபட ½ அடி முதல் 1 அடி வரை உள்ள விநாயகர் சிலைகளை வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து சாந்த நாததிருக்கோவில்  அருகே உள்ள ஜிடிஎன் பூஜை பொருட்கள் விற்பனைகடையில்   விநாயகர் சிலைகளை வைத்து விற்பனை செய்து வரும் வியாபாரிகள் சேகர்மோகன்  கூறியதாவது:-விற்பனை மந்தம்  பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை உள்ளதால் பெரிய அளவிலான சிலைகள் விற்பனை செய்யப்படவில்லை. இருப்பினும் வீட்டில் வைத்து வழிபடும் வகையில் ½ அடி முதல் 1 அடி வரை உள்ள சிலைகள் சுமார் ரூ.50 முதல் சுமார் ரூ600 வரை விற்பனை செய்கின்றோம் . கடந்த சில ஆண்டுகளை காட்டிலும் தற்போது மிகவும்  விற்பனை மந்தமாக உள்ளதாக கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + = 19