புதுக்கோட்டை நகரில் காங்கிரஸ்கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

புதுக்கோட்டை நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் விழா மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் முன்னாள் நகர்மன்ற தலைவர் துரை. திவியநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரசேகரன், மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் இப்றாஹீம் பாபு, வட்டார தலைவர் சூர்யா பழனியப்பன்,  நகர தலைவர் மதன் ஜுவல்லரி கண்ணன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை காமராஜபுரத்தில் உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கும் புதுக்கோட்டை நாடார் சமூகத்தினர் திருமண மண்டபத்தில் உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கும் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் உள்ள காமராஜர் அவர்களின் திருவுருவ படத்திற்கும் புதுக்கோட்டை வட்டாரம் திருமலைராய ஊராட்சி மேட்டுப்பட்டி இந்திரா நகரில்  அமைக்கப்பட்ட திருவுருவ படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்திரா நகரில்  காங்கிரஸ் பேரியக்கத்தின் கொடியினை முன்னாள் நகர் மன்ற தலைவர் துரை.திவியநாதன் ஏற்றினார் பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கவுன்சிலர் வேங்கை அருணாசலம் காட்டூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செம்பை மணி. செம் ராஜா முகமது குட்லக் எம்.ஏ.எம் தீன், முகமது மீரா, விவசாய பிரிவு தனபதி, முன்னாள் நகர தலைவர் மேப்ஸ் வீரையா, ஜம்புலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் துரைக்கண்ணன், திருக்கட்டளை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபால்,  வட்டார தலைவர் ஜெய்சங்கர், சிவக்குமார், அருள் முருகன், மேட்டுப்பட்டி கணேசன், நாராயணன், ரெங்கசாமி, சேங்கத்தோப்பு ஆறுமுகம், சந்தை செந்தில்,  சதீஷ், முத்துவிஜயன்,  அடைக்கலம், மக்கள் கோபால் டிரைவர் சிவா, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் கவுரி, நிர்வாகிகள் சிவந்தி, இந்திரா உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்துக்கொண்டனர்.