புதுக்கோட்டை திலகர் திடல் ஏவிசிசி மழலையர் பள்ளியில், ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சி
திட்ட இயக்குனர் ஏவிசிசி கணேசன் தலைமையில் மாற்றுத்திறனாளி மகிழ்ச்சி பொங்கல் விழா நடைபெற்றது.
கரும்புத் தோட்டம் போல வடிவமைக்கப்பட்ட பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவிகளே பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்தனர், பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு மழலையர்கள் மாலை அணிவித்து, மரியாதை செய்தனர்.
தேசிய குழந்தைகள் நல ஆலோசகர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் ஏற்பாட்டின் பேரில், 54 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு பொங்கல் புத்தாடைகள்,அரிசி,வெல்லம், தேங்காய், முந்திரி, திராட்சை தொகுப்புடன் தலா 500 ரூபாய் ரொக்கத்தொகையை
பள்ளி நிர்வாகி மல்லிகா கணேசன் வழங்கினார்,விழாவில் பள்ளி நிறுவனர் ஏவிசிசி கணேசன் பேசுகையில்,மாட்டுப் பொங்கல்,காணும் பொங்கல்,சுகாதாரப் பொங்கல், சமத்துவப் பொங்கல் வைப்பது போல, உடற்கூறுகளால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை மனதளவில் உற்சாகப்படுத்தவும்,சமுதாயத்தின் ஓர் அங்கமான அவர்களுக்கு உதவும் மனப்பான்மையை மாணவ,மாணவியர் மனங்களில் விதைக்க வேண்டும் என்பதற்காகவும்,இந்த மாற்றுத்திறனாளி மகிழ்ச்சி பொங்கல் பள்ளியில் கொண்டாடப்படுவதாக குறிப்பிட்டார், முன்னதாக தலைமை ஆசிரியை தேவிகா அனைவரையும் வரவேற்றார், நிறைவாக மேலாளர் கைலாசம் நன்றி தெரிவித்தார்.