புதுக்கோட்டை திருவரங்குளத்தில் பிடாரியம்மன்  திருக்கோவில்  44ஆம்  ஆண்டு திருவிழா சிறப்பாக  நடைபெற்றது

புதுக்கோட்டைதிருவரங்குளத்தில் பிடாரியம்மன் திருக்கோவில்  44ஆம்  ஆண்டு திருவிழா  அரசு  ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்களால் நடத்தப்படும்10ம் நாள் மண்டகப்படி   சிறப்பாக நடைபெற்றது.  தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும், முளைப்பாரி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் கோவிலில்  இதைதொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர், அம்மன் வீதி உலா நடைபெற்றது.

வட்டார அனைத்துஅரசு  ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்களால் நடத்தப்படும்10ம் நாள் மண்டகப்படி வெகு விமர்சையாக நடந்தது பிடாரியம்மனுக்குபாலபி ஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர்,  திருநீர்  உள்ளிட்ட  பூஜை பொருள்களில்  சிறப்பு அபிஷேகம்,  சந்தனக்காப்பு மகா தீபாராதனை நடைபெற்றது .

பின்னர் அரசு  ஆரம்ப சுகாதார நிலையவளாகத்தில் மருத்துவர்கள் ,செவிலியர்கள் பணியாளர்களின் கலைநிகழ்ச்சியும் இரவு பிடாரியம்மன் திடலில்   சிறப்பு  பட்டிமன்றம் நடைபெற்றது, இதில்அறந்தாங்கி சுகாதார பகுதி மாவட்டம் துணை இயக்குனர் சுகாதார பணிகள் நமச்சிவாயம் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் புதுக்கோட்டை கிளை செயலாளர் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் திருவரங்குளம் வட்டார மருத்துவர்  ராம்சந்தர்,  திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தம்பிதுரை, திருவரங்குளம் வட்டாரச் சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன் உள்ளிட்டமருத்துவர்கள் ,செவிலியர்கள் பணியாளர்கள்  நகர்மன்ற உறுப்பினர் செந்தாமரைபாலு  ஆன்மிக ஆர்வலர்கள்  திரளான பக்தர்கள்ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர், இதற்கான ஏற்பாடுகளை மண்டகபடிதாரர்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

26 − 20 =