சமூக அமைப்புகளில் முன்னோடி அமைப்பாக இருந்து வரும் ஜேசிஐ அமைப்பின் புதுக்கோட்டை சென்ட்ரல் அமைப்பின் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா கிங்டவுன் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது.


விழாவிற்கு சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் குமரன் கலந்து கொண்டார். தலைவராக டாக்டர். ஆர்.ஆர். அன்பு தனபாலன், செயலாளராக சுப்பிரமணி, பொருளாளராக “சேவகன்” சத்யராஜ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். புதிய நிர்வாகிகளுக்கு நடப்பு ஆண்டின் மண்டலத் தலைவர் ராஜலிங்கம் மற்றும் முன்னாள் மண்டல தலைவர் அழகப்பன் ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்கள், விழாவில் மண்டல செயலாளர் கார்த்திக், மண்டல துணை தலைவர் இந்திரா பிரியதர்ஷினி மற்றும் ஜெகதீசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் உட்பட பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இந்த வருடம் மாற்றுத்திறனாளிகளுக்கும் இளைஞர்களுக்கும் பல்வேறு செயல் திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாக இந்த வருடத்தின் புதிய தலைவர் ஆர்.ஆர். அன்பு தனபாலன் தெரிவித்தார். புதிய நிர்வாகிகளை பல்வேறு அமைப்புகளில் பிரமுகர்கள் கலந்துகொண்டு வாழ்த்தி சிறப்பித்தனர்.


