புதுக்கோட்டை ஜெ.ஜெ கல்லூரியில் தேசிய சித்த மருத்துவ நாள் கொண்டாட்டம்

புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி உயிர்வேதியியல் துறையின் சம்னர்ஸ் குழு சார்பில் தேசிய சித்த மருத்துவ நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சித்த மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டம், ஆட்டாங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் இன்று நடத்தப்பட்டது. 

இதில் உயிர்வேதியியல் துறையின் துறைத்தலைவர் கனிதா வரவேற்புரையாற்றினார், உயிர்வேதியியல் துறையின் உதவிப்பேராசிரியர்கள் பழனியப்பன் மற்றும் சாதுவன் சித்த மருத்துவத்தின் முக்கியத்துவத்தை கல்லூரி மாணவர்களுக்கு தெளிவாக விளக்கினார்.  நமது பாரம்பரியமான உணவே மருத்துவ குணங்களை உடையது என்பதை எடுத்துக்கூறினார்.  மேலும் ஆரோக்கியமாக வீட்டில் செய்யப்படும் உணவுகளை தவிர்த்து கடைகளில் கிடைக்கும் துரித உணவுகள், சாட் வகைள், பீட்ஸா, பர்கர், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ், கார்பனேட்டட் குளிர்பானங்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருக்கும் இனிப்பு, புளிப்பு, காரம், உப்பு நிறைந்த நொறுக்குத்தீனிகள் போன்றவைகளை தவிர்த்து கடலைமிட்டாய், எள் உருண்டை, பொரி உருண்டை, தேன் மிட்டாய் ஆகிய ஆரோக்கியமான உணவுப்பொருட்களை உட்கொள்ளுமாறு எடுத்துரைத்தார்.  

உடல் உபாதைகளுக்கு மருந்து கடைகளில் சென்று மருந்து வாங்கி உட்கொள்ளாமல், நமது வீட்டில் உள்ள மூலிகை செடிகளை உபயோகித்து ஆரோக்கியமாக வாழ அறிவுரை வழங்கினார், மேலும் 38 அரிய வகை மருத்துவ குணங்களை கொண்ட மரக்கன்றுகளை மாணவர்களுக்கும் அப் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆட்டாங்குடி, ஊராட்சி மன்றத்தலைவர் ரெங்கம்மாள் பழனிச்சாமி கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்,  பள்ளி தலைமை ஆசிரியர் நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

மேலும் அழகப்பா பல்கலைக்கழக உயிரியியல் தகவல் துறையின் உதவிப் பேராசிரியர் ஜே.ஜோசப் சகாயராயன், தாவர அடிப்படையிலான மாற்று மருந்து கண்டுபிடிப்பின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =