புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரியில் உயிர் வேதியியல் துறை சார்பாக கமலகண்ணன், உதவிப்பேராசிரியர், விலங்கியல் துறை, பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி தலைமையில் ஆய்வக எலி வளர்ப்பு மற்றும் மருத்துவ ஆராய்ச்சியில் எலிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. உயிர்வேதியியல் துறைத்தலைவர் கனிதா வரவேற்றார், சிறப்பு விருந்தினர் விரிவுரையுடன் பயிலரங்கு ஆரம்பமானது, அவர் ஆய்வக விலங்குகளை கையாளும் போதும், பராமரிக்கும் போதும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேலும் சிறப்பு விருந்தினர் பல்வேறு பராமரிப்பு படுக்கை, உணவு மற்றும் சுகாதாரம் போன்றவற்றை பற்றியும் தெளிவாக கூறினார்.
பொது உடலியல்,பாலினம் குறிக்கும் நுட்பங்கள், உடல்நிலை மதிப்பெண் பற்றி மாணவர்கள் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, பல்வேறு நோய்களுக்கு பொருத்தமான விலங்கு மாதிரிகள் தேர்வு, கையாளுதல், மருந்து நிர்வாகத்தின் வழிகள் மற்றும் உடல் திரவங்களை திரும்பப் பெறுதல் ஆகியவைகளையும் தெளிவுபடுத்தினார். விரிவுரையின் முடிவில் வலி நிவாரணி மருந்துகள், அறுவை சிகிச்சை முறைகள் , காயம் குணப்படுத்தும் முறைகள் போன்றவை எடுத்துரைத்தார். இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது., இறுதியாக உயிர்வேதியியல் துறை, முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவி ஐஸ்வர்யா நன்றியுரை வழங்கினார்.