புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் 800-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் கலந்து கொண்டனர். ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் சுதா வரவேற்புரையும், கற்பக விநாயகர் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் கவிதா சுப்பிரமணியன் தலைமை உரையும் ஆற்றினர். ஊடகவியலாளரும் படைப்பாளருமான கலைமாமணி விருது பெற்ற கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷிணி இன்றைய சமூக சூழலின் பெண்களின் நிலை குறித்தும், பெண் குழந்தைகளின் முக்கியத்துவம், பாதுகாப்பு குறித்தும், பல்வேறு துறைகளில் பெண்கள் அடைந்த வளர்ச்சி பற்றியும் சிறப்புரை ஆற்றினார்.

பெண்களுக்கு தேவையான மூன்று முக்கிய அம்சங்களான கல்வி, பொருளாதாரம் மற்றும் உணர்ச்சி மேம்பாட்டினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து மகளிர் தின விழாவையொட்டி பல்வேறு போட்டிகள் மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் நடத்தப்பட்டு அதற்கானப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இறுதியில் மகளிர் மேம்பாட்டு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரத்னா தேவி நன்றி உரை வழங்கினார்.