புதுக்கோட்டை செந்தூரான் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கான மதிப்பு கூட்டு திறன் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம் லெணா விலக்கில் அமைந்துள்ள செந்தூரான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நான்கு தினங்களுக்கு இரண்டாமாண்டு, மற்றும் மூன்றாம் ஆண்டு அமைப்பியல் துறை, இயந்திரவியல் துறையைச் சேர்ந்த பொறியியல் மாணவர்களுக்கு மதிப்பு கூட்டு திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த டிசைன் புராஜெக்ட் மற்றும்  3D பிரிண்டிங் அகாடமியின் இயக்குநர் கலைச்செல்வன் மற்றும் தலைமை பயிற்ச்சியாளர் பூபதி ராஜா ஆகியோர் இணைந்து மாணவர்களுக்கு மதிப்பு கூட்டு திறன் பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியில் மாணவர்களுக்கு  3D  மாடலிங் உருவாக்குவதற்க்கான மென்பொருட்களை கற்பித்து அந்த செய்து எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் செயல் விளக்கம் மூலம்   3D   பிரிண்டிங் மாதிரியை எடுத்துக் கூறினார்.

இந்த தொழில் நுட்பத்தின் மூலம் அதிக அளவிலான பொருள்களை தரமாகவும் துல்லியமாகவும் வடிவமைக்க3D   பிரிண்டிங் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்குமென்றும் மேலும் குறைந்த செலவில் அதிக அளவுள்ள பொருள்களை வடிவமைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 3D   பிரிண்டிங் தொழில்நுட்பம் பெரும்பாலான தொழிற்சாலைகளில் கொண்டுவரப்பட்டால் மனித ஆற்றல் குறைவதோடு பொருள்களின் விலையும் குறைய வாய்ப்பிருக்கிறது. அதே போல் மாணவர்களுக்கு இந்த திறன் பயிற்சியின் மூலம் தொழில் நுட்ப நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விழிப்புணர்வை எடுத்துரைத்தனர். இந்த பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரியின் முதன்மைச் செயல் அதிகாரி ஏ.வி.எம்.எஸ். கார்த்திக், மற்றும் டிசைன் புராஜெக்ட் மற்றும்  3D பிரிண்டிங் அகாடமியின் இயக்குநர் கலைச்செல்வன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.

பயிற்சியின் நிறைவில் கல்லூரியின் தலைவர் ஏ.வி.எம். செல்வராஜ், துணைத் தலைவர் நடராஜன், மேலாண்மை இயக்குநர்  ஆர். வயிரவன், நிர்வாக இயக்குநர் எம். பாண்டிகிருஷ்ணன், செயலாளர் டி. தியாகராஜன், முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.எம்.எஸ். கார்த்திக், கல்லூரியின் முதல்வர் கே. கணேஷ் பாபு, இயந்திரவியல் மற்றும் அமைப்பியல் துறையின் தலைவர்கள் கலந்து கொண்டனர், பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இயந்திரவியல் துறையின் இணைப்பேராசிரியர் தினேஸ்குமார்  செய்திருந்தார்.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 89 = 92