புதுக்கோட்டை மாவட்டம் லேணா விலக்கு செந்தூரான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 15 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது, இதில் இயக்குனர் பாண்டியராஜன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் கல்லூரியில் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது, மேலும் கல்லூரி மாணவ,மாணவியரின் நடன கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மாணவர்களிடம் உற்சாகமூட்டும் வகையில் பேசி கலந்துரையாடல் நடத்தினார், மேலும் இயக்குனர் பாண்டியராஜன் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு உற்சாகமாக பதில் அளித்தார்.