புதுக்கோட்டை செந்தூரான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்  ஊட்டசத்து விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை மாவட்டம் லெணா விலக்கில் அமைந்துள்ள செந்தூரான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் திருமயம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மற்றும் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து நடத்திய கல்லூரியின் வளரிளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர், சைல்டு லைன் 1098 அலுவலர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், கல்லூரியின் பேராசிரியர்கள், மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர் மற்றும் கல்லூரியின் முதல்வர் க. கணேஷ் பாபு,  ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு இரத்த சோகை, தன் சுத்தம், வளர் இளம் பெண்களின் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வழங்கினர், கலந்து கொண்ட மாணவிகளுக்கு இரத்த சோகை பற்றிய விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது. 

கல்லூரியின் அனைத்து மாணவிகளுக்கும், மகளிர் ஆகியோருக்கும் எடை மற்றும் உயரம் எடுக்கப்பட்டு, சரிவிகித எடை மற்றும் உயரத்தை கணக்கிட்டு குறைவாக உள்ளவர்களுக்கு சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. மாணவிகளுக்கு பாசிப்பயறு, கொண்டைக்கடலை, இணை உணவு மாவு கொழுக்கட்டை, நெல்லிக்காய், உலர் திராட்சை, எள்ளுருண்டை, கடலைமிட்டாய், பேரிச்சம்பழம் மற்றும் முருங்ககீரை சூப் சத்து நிறைந்த உணவுகள் வழங்கப்பட்டது. 

கல்லூரியின் தலைவர் ஏ.வி.எம். செல்வராஜ், துணைத் தலைவர் சோம. நடராஜன், மேலாண்மை இயக்குநர்,  ஆர். வயிரவன், முதன்மைச் செயல் அதிகாரி ஏ.வி.எம்.எஸ். கார்த்திக், நிர்வாக இயக்குநர் எம். பாண்டிகிருஷ்ணன் செயலாளர் டி. தியாகராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

77 − 74 =