புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா தனியார் மஹாலில் நடைபெற்றது.
நிகழ்விற்கு செஞ்சுரி லயன்ஸ் சங்கத்தின் தலைவர் புவனேஸ்வரி தங்கமாளிகை எஸ்.நடராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் ஏ.அரவிந்த் அனைவரையும் வரவேற்றார். பட்டய தலைவர் ஜெ.கண்ணன் முன்னிலை வகித்தார்.
லயன்ஸ் மாவட்டத்தலைவர் தஞ்சை சவரிராஜ் கலந்துகொண்டு செஞ்சுரி லயன்ஸ் சங்க 2021-22 ஆண்டின் புதிய நிர்வாகிகள் தலைவர் பி.தெட்சிணாமூர்த்தி, செயலாளர் எஸ்.பக்தவச்சலம், பொருளாளர் ஏ.அன்புசண்முகம் ஆகியோர்க்கு பொறுப்புகளை வழங்கியும், நலத்திட்டங்களும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
லயன்ஸ் விஜயலெட்சுமி புதிய உறுப்பினர்களுக்கு பின்அணிவித்து வாழ்த்திப் பேசினார். மண்டலத்தலைவர் கே.ஆர்.விஜயரெங்கன், சென்றாண்டின் நிர்வாகிகள் புவனேஸ்வரி தங்கமாளிகை எஸ்.நடராஜன், ஏ.அரவிந்த், எஸ்.கார்த்திகேயன் ஆகியோரின் சமூக சேவைகளை பாராட்டி சிறப்பு விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.
சாசனத் தலைவரும் புதுக்கோட்டை சட்டமன்றமன்ற உறுப்பினருமான வை.முத்துராஜா நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினார். கல்வியாளர் வைரவன், முன்னாள்தலைவர் சந்தைகுமார் மற்றும் ரமேஷ், டேவிட், குத்புதீன், இராமநாதன், தேசிங்குராஜன், சேகர், துரைசிங்கம் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவாக அன்புசண்முகம் நன்றி கூறினார். எஸ்.கார்த்திகேயன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.