புதுக்கோட்டை சுதர்சன் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கணினி நிரலாக்க போட்டி

சுதர்சன் பொறியியல் கல்லூரி மற்றும்  இ-பாக்ஸ் கல்லூரிகள் இணைந்து தேசிய அளவிலான கணினி நிரலாக்கப் போட்டியை இன்று  ஏற்பாடு செய்தது. தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் குறியீட்டுப் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர், இந்நிகழ்ச்சியில் மொத்தம் 298 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதல் பரிசான ரூ. 10000, கோப்பை மற்றும் ஷீல்டையும், இரண்டாம் பரிசான ரூ.7000 மும் கோப்பை மற்றும் ஷீல்டையும் வென்றனர். விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரி மூன்றாம் பரிசான ரூ 5000 ,கோப்பை மற்றும் ஷீல்டையும் வென்றனர். அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் கல்லூரியின் முதல்வர் கே.சீனிவாசன் அனைவரையும் வரவேற்று, பேச்சால் மாணவர்களை உற்சாகப்படுத்தினார். மேலும், மற்ற கல்லூரிகளிலும் எதிர்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்கேற்கவும், பல்வேறு வாய்ப்புகளை ஆராயவும் அனைத்து மாணவர்களையும் ஊக்குவித்தார், விழாவிற்கு சுதர்சன் கல்வி குழுமத்தின் தாளாளர் ஸ்ரீ.கே.விஜய்குமார் தலைமை தாங்கினார்.

பின்னர், ஆம்பிசாஃப்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.புனிதா மற்றும் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரதீப், துரைசாமி ஆகியோர் விழாவின் சிறப்பம் சங்களைப்பற்றி கூறினர். பின்னர் ஆம்பிசாஃப்ட் டெக்னாலஜிஸின் தலைமை கற்றல் அதிகாரி சசிதரன், சிறந்த குறியீட்டாளர்களின் நன்மைகள் பற்றி விளக்கி, போட்டி குறித்த மாணவர்களிடம் கருத்துக் கேட்டார். தொடர்ந்து நிறுவனத்தின் இயக்குநர் ஜி.சிவராமகிருஷ்ணன்  இ-பாக்ஸ்  தளம் மூலம் புதுமையான கற்பித்தல் மற்றும் கற்றல் பற்றி விளக்கினார்,இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருச்சி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் அசோசியேட் டீன் ஸ்ரீநிவாசுலு ரெட்டி அழைக்கப்பட்டார். மேலும் சிறப்புரையாற்றிய அவர், வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயத்தை  சுதர்சன் கல்வி குழுமத்தின்  செயலாளர் ஸ்ரீ. கே. அஜய் குமார் வழங்கினார், பின்னர் கல்லூரியின் துணை முதல்வர் சுஜாதா நன்றியுரையை முன்மொழிந்து அனைத்து மாணவ  பங்கேற்பாளர்களையும், தன்னார்வலர்களையும் பின்னர் வரக்கூடிய நிகழ்வுகளில் இன்னும் தீவிரமாக பங்கேற்க ஊக்குவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 4 =