புதுக்கோட்டை சுதர்சன் பொறியியல் கல்லூரியில் வளர் இளம் பருவத்தினருக்கான மருத்துவ முகாம்

சுதர்சன் பொறியியல் கல்லூரியில் வளர் இளம் பருவத்தினருக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் முதலாம் ஆண்டு மாணவ,மாணவிகள் அனைவரும் பங்கேற்றனர், முகாமை கல்லூரி முதல்வர் கு. ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்தார். கல்லூரியின் துணை முதல்வர் ப.சுஜாதா முன்னிலை வகித்தார். முகாமை சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் லலிதா தங்கள் குழுவோடு வந்து அனைத்து மாணவ,மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டனர்.

வளர் இளம் பருவத்தினருக்கான உணவு முறைகளையும், ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும் மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மற்றும் ஆங்கில உதவி பேராசிரியை சஹானா மற்றும் இயற்பியல் துறை உதவி பேராசிரியர் சந்திரன் செய்திருந்தனர்.