புதுக்கோட்டை அருகேயுள்ள சத்தியமங்கலம் சுதர்சன் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு கணினி பொறியியல் துறை மாணவர்களுக்கான வளாக நேர்முகத்தேர்வு நடைபெற்றது. சென்னை கிளாசிக் ஒர்க் டெக்னாலஜி, நிறுவன மனிதவள அதிகாரிகள் கலந்து கொண்டு மாணவர்களை தேர்வு செய்தனர்.
இந்நிகழ்வினை கல்லூரியின் முதல்வர் ஸ்ரீநிவாஸன் தொடங்கி வைத்தார். கல்லூரி வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜான் ஜோசப் வளாக நேர்முகத்தேர்வு நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார். மேலும் நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட நான்கு மாணவர்களை கல்லூரி நிர்வாகிகள் பாராட்டினர்.