ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் 402வது பட்டாபிஷேக விழா மற்றும் 428 வது ஜெயந்தி தின விழா வெகு விமர்சையாக புதுக்கோட்டை ஜெஜெ காலேஜ் அருகில் உள்ள சிவபுரத்தில் நடைபெற்றது.
பிப்ரவரி 22 ஆம் தேதி பட்டாபிஷேக விழா நடைபெற்றது தொடர்ந்து ஜெயந்தி விழாவானது பிப்ரவரி 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு பாதுகாபூஜை பக்தர்களின் திருகரங்களால் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு மகா அபிஷேகம் 12 மணிக்கு மங்கள ஆரத்தி பன்னிரண்டு முப்பது மணிக்கு அறுசுவை அன்னதானம் ஆகிய நிகழ்வுகள் அடுத்தடுத்து நடைபெற்றது அதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் ரவிச்சந்திரனின் உதய ராகம் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஏளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த தளத்தில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளன்று மாலை 6:30 மணிக்கு ஸ்ரீ சத்திய நாராயண பூஜை நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ ஸ்ரீ குரு ராகவேந்திர ஸ்வாமிகள் பிருந்தாவனம் டிரஸ்ட் சார்பில் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்று வருகின்றது: இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் 9788527874, 9443205235, 9842098600, 9443179503, 9710538992, 7825915386 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.









